/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்தியன் ஆயில் - ஏர் இந்தியா இடையே விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தம்

ADDED : ஆக 23, 2025 02:50 AM

கோவை: நிலையான விமான எரிபொருள் விநியோகத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தில், இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் சைலேஷ் தார் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் பாலாஜி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தியன் ஆயில் தலைவர் சாஹ்னி கூறுகையில், ''பானிபட் சுத்திகரிப்பு நிலையத்தில், நிலையான விமான எரிபொருள் தயாரிப்புக்காக சர்வதேச தரச் சான்றிதழ் பெற்ற முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை இந்தியன் ஆயில் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம், இந்திய விமானப் போக்குவரத்தை பசுமை பாதைக்கு கொண்டு செல்லும் முக்கியமான படியாகும்,'' என்றார்.
ஏர் இந்தியா தலைமை அதிகாரி வில்சன் கூறுகையில், “2050க்குள் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் 'பூஜ்ஜிய கார்பன் வெளியீடு' இலக்கை அடைய, இந்தியன் ஆயிலுடனான இந்த ஒப்பந்தம் உதவும்,'' என்றார்.