/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலை விஞ்ஞானிக்கு இந்திய களை அறிவியல் சங்க விருது
/
வேளாண் பல்கலை விஞ்ஞானிக்கு இந்திய களை அறிவியல் சங்க விருது
வேளாண் பல்கலை விஞ்ஞானிக்கு இந்திய களை அறிவியல் சங்க விருது
வேளாண் பல்கலை விஞ்ஞானிக்கு இந்திய களை அறிவியல் சங்க விருது
ADDED : டிச 06, 2024 05:06 AM

கோவை: கோவை, வேளாண் பல்கலை விஞ்ஞானிக்கு, இந்திய களை அறிவியல் சங்கத்தின் உயரிய விருதான 'முன்னவர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் வாரணாசியில் இந்து பனாரஸ் பல்கலையில் தேசிய களை அறிவியல் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில், இந்திய களை அறிவியல் சங்கத்தின் 'முன்னவர்' விருது, கோவை வேளாண் பல்கலை உழவியல் பேராசிரியர் முரளி அர்த்தநாரிக்கு வழங்கப்பட்டது.
முரளி அர்த்தநாரி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக களை மேலாண்மைத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்களைப் பயன்படுத்தி கைக் களை எடுத்தல், இயந்திரங்களைப் பயன்படுத்தி களை எடுத்தல், பயிர் இடைவெளி பேணி களை மேலாண்மை, களைக்கொல்லி என, நான்கு வகை களை மேலாண்மை குறித்தும் இவரின் ஆய்வுகள் இந்திய அளவில் முன்னோடியாக விளங்குகின்றன. 79க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தேசிய, சர்வதேச அளவில் வெளியாகியுள்ளன.
தவிர, நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, டிரோன்களில் களைக்கொல்லி பயன்பாட்டுக்கான உத்தியையும் இவர் வகுத்துள்ளார். இவரின் ஒருங்கிணைந்த களை மேலாண்மைப் பணிகளுக்காக, முன்னவர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதை, ராணி லட்சுமிபாய் மத்திய பல்கலை வேந்தர் பஞ்சாப் சிங், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை பொது இயக்குநர் சவுத்ரி வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஜபல்பூர் இந்திய களை அறிவியல் சங்க இயக்குநர் மிஸ்ரா, பன்னாட்டு களை அறிவியல்சங்க தலைவர் சமுந்தர் சிங், வாரணாசி பனாரஸ் இந்து பல்கலை வேளாண் புல முதல்வர் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.