/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சாம்பியன் ஆப் சாம்பியன்' பட்டம் வென்ற இந்திய அணி
/
'சாம்பியன் ஆப் சாம்பியன்' பட்டம் வென்ற இந்திய அணி
ADDED : ஆக 17, 2025 11:26 PM

கோவை; கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில், சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, நேற்று நடந்தது.
இதில், இந்தியா, தாய்லாந்து, ஓமன், மலேசியா, இந்தோனேஷியா ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்த, 520 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் ஐந்து வயது முதல், வயது வரம்பின்றி ஆக்ரோஷமுடன் போட்டியிட்டனர். குழு 'கட்டா' பிரிவில் ஓமன் அணி தங்க பதக்கத்தையும், இந்திய அணி வெள்ளி பதக்கத்தையும் வென்றது.
'சாம்பியன் ஆப் சாம்பியன்' பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் வழங்கினர்.