/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாடு முழுதும் ஒரே மின் சட்டம்: தொழில்துறை வலியுறுத்தல்
/
நாடு முழுதும் ஒரே மின் சட்டம்: தொழில்துறை வலியுறுத்தல்
நாடு முழுதும் ஒரே மின் சட்டம்: தொழில்துறை வலியுறுத்தல்
நாடு முழுதும் ஒரே மின் சட்டம்: தொழில்துறை வலியுறுத்தல்
ADDED : நவ 26, 2025 07:14 AM
கோவை: தொழில்துறை நலம்பேண, நாடு முழுதும் ஒரே மாதிரியான மின்சார சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் ஜெயபால் கூறியதாவது:
தொழிலாளர் நலத்துக்கான புதிய சட்டம், ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்துக்குப் பிறகான மற்றுமொரு பெரிய சீர்திருத்தமாகும். அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயமாக நியமன ஆணை வழங்கல், 10 பேருக்கு குறைவாக வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ., வழங்கப்பட்டு, காப்பீட்டின் கீழ் கொண்டு வருதல், ஆண்டில் 30 நாட்கள் மட்டுமே வேலை செய்தாலும் போனஸ் பெறும் உரிமை என, தொழிலாளர்கள் நலன் பேணப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்க, தொழில்நிறுவனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும்.
இது போல், நாட்டின் தொழில் வளம், தொழில்துறையினரை காக்கவும் சட்டங்களை வகுக்க வேண்டும். சர்வதேச விலைக்கு இணையாக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருள் கிடைக்க வகை செய்து, கண்காணிக்க வேண்டும்.
நாடு முழுதும் ஒரே மின்சார சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களிடம் கலந்தாய்வு செய்து, சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

