/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர்களில் வரும் பூச்சிகளால் தொல்லை; துார்வாராத சாக்கடையால் மக்கள் அவதி
/
புதர்களில் வரும் பூச்சிகளால் தொல்லை; துார்வாராத சாக்கடையால் மக்கள் அவதி
புதர்களில் வரும் பூச்சிகளால் தொல்லை; துார்வாராத சாக்கடையால் மக்கள் அவதி
புதர்களில் வரும் பூச்சிகளால் தொல்லை; துார்வாராத சாக்கடையால் மக்கள் அவதி
ADDED : செப் 22, 2024 11:52 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், 36வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், புதர் மண்டியும், கழிவுகள் தேங்கியும் உள்ளதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 36வது வார்டில், ஜோதிநகர் எம்.ஜி.ஆர்., நகர், அமைதி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்குள்ள கால்வாய்கள் முறையாக துார்வாராமலும், புதர் அகற்றப்படாமலும் உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது: நகராட்சி, 36வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், சாக்கடை கால்வாய்கள் முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் துார்வாரினாலும், அவற்றை அப்படியே விட்டு செல்வதால் கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.
மேலும், மாக்கினாம்பட்டியில், கால்வாய் துார்வாரிய கழிவுகளை அதே பகுதியில் குவித்து வைத்துள்ளதால், கழிவுநீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதனால், கொசுத்தொல்லை ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
வார்டு முழுவதும் ரோட்டோரங்கள், காலியிடங்களில் புதர் மண்டி காணப்படுகிறது. அங்கு இருந்து பூச்சிகள், விஷ பூச்சிகள் அதிகளவு வெளியேறுவதால், மிகுந்த சிரமமாக உள்ளது.
மேலும், வார்டுக்கு உட்பட்ட நுண்ணுயிர் உரக்கிடங்கில் காய்கறிகள், அழுகிய பழங்கள் கொட்டி நீர் விட்டு அரைப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அருகில் உள்ள வீடுகளில் ஈ மொய்க்கிறது. இதனால், மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கால்வாய்களை துார்வாரவும், புதர்களை அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.