UPDATED : அக் 19, 2025 10:00 PM
ADDED : அக் 19, 2025 08:44 PM

சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி
கவர்னர் ரவி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தீபாவளியன்று, இருள் மீதான ஒளியின் வெற்றி, தீமை மீதான நன்மையின் வெற்றி, அறியாமை மீதான ஞானத்தின் வெற்றியை கொண்டாடுகிறோம். இந்நாளில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளத்தை கடவுள் நல்கி அன்பு, கருணையால் வாழ்க்கையை நிரப்பட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்
மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அமமுக தினகரன்
தீமையை ஒழித்து நீதியின் வெற்றியை நிரூபிக்கும் இந்த புனிதமான தீபாவளி பண்டிகையில் நாம் ஏற்றி வைக்கும் ஒளி அறியாமையை அகற்றி அதைக் கொண்டு வரட்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி
இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்! இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழகத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.