/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துார் வாரப்படாத ஜெகதளா ரேஞ்ச் ஆறு: 100 ஏக்கர் காய்கறி பாதிக்கும் அபாயம்

ADDED : அக் 19, 2025 08:27 PM
குன்னுார்: குன்னுார் கிடங்கு அருகே, ஆறு தூர்வாராததால், 100 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னுார் ஜெகதளா, ஓதனட்டி பகுதியில் இருந்து கிடங்கு வழியாக செல்லும் ஜெகதளா ரேஞ்ச் ஆற்று வெள்ளம் வெலிங்டன் வழியாக குன்னுார் சென்றடைகிறது.
கிடங்கு அருகே இந்த ஆற்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் துறை சார்பில் துார் வாரப்பட்டது. அதன் பிறகு, பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. தற்போது மழை தீவிரமடைந்து வரும் நிலையில், விவசாய நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியை சேர்ந்த சஜீவன் கூறுகையில், ''ஆறு தூர் வாரப்படாமல் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது, இந்த பகுதிகளில் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலை தோட்ட காய்கறிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. தூர் வாரப்படாமல் உள்ளதால் விவசாய தோட்டங்களில் மழை நீர் புகுந்து காய்கறிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்,'' என்றார்.