/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்துக்குள் தீபாவளி -கொண்டாடி மகிழ்ந்த பழங்குடியின மக்கள்
/
வனத்துக்குள் தீபாவளி -கொண்டாடி மகிழ்ந்த பழங்குடியின மக்கள்
வனத்துக்குள் தீபாவளி -கொண்டாடி மகிழ்ந்த பழங்குடியின மக்கள்
வனத்துக்குள் தீபாவளி -கொண்டாடி மகிழ்ந்த பழங்குடியின மக்கள்
ADDED : அக் 19, 2025 08:26 PM
பந்தலூர்:பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பழங்குடியின கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டம் பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் வனத்திற்கு மத்தியில், காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். காடும் காடு சார்ந்தும் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை ஒன்றினைத்து தீபாவளி கொண்டாடப்பட்டது. அய்யன்கொல்லி அத்திச்சால் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், சமுதாய தலை வர் சந்திரன் வரவேற்றார்.
ஊர் தலைவர் மாதன் தலைமை வகித்து பேசுகையில், ''வனத்தையும்,வன விலங்குகளையும் சார்ந்து வாழும் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் வெளியிடங்களுக்கு வருவதற்கு அச்சப்படும் நிலையில் உள்ளனர். சமீபகாலமாக கல்வியில் மேம்பட்டு வெளிநபர்களிடம் பேசும் நிலைக்கு மாறி உள்ளனர். மேலும், பழங்குடியின விழாக்களில் தீபாவளியும் ஒன்று. ஆனால் புத்தாடைகள் எடுப்பது; புதிதான தின்பண்டங்களை சமைப்பது போன்றவை இல்லை. அனைவரும் ஓரிடத்தில் சங்கமித்து, கலாசார உணவுகளை சமைத்து மகிழ்ச்சியாக அந்த நாளை கொண்டாடி மகிழ்கிறோம்,'' என்றார்.
கலாசார நடனம், வாத்திய இசை, கலாசார விருந்தோம்பல் ஆகியவை நடந்தன.