/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் மண்சரிவு: ஊட்டி ரயில் ரத்து
/
குன்னுாரில் மண்சரிவு: ஊட்டி ரயில் ரத்து
ADDED : அக் 19, 2025 08:14 PM
குன்னுார்: குன்னுார் - - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், மண்சரிவு ஏற்பட்டதால், ஊட்டி ரயில் ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் மலை ரயில் பாதையில், ஆடர்லி அருகே 14வது கி.மீ., பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
ஹில் குரோவ் பகுதியில், இரு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் பாறைகள் உருண்டு விழுந்ததால், தண்டவாளத்தின் இடையே உள்ள 'ரேக் பார்' சேதமானது. இதனால், மேட்டுப்பாளையம் --- ஊட்டி ரயில் மற்றும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது. 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். எனினும், குன்னுார் - - ஊட்டி இடையே மலை ரயில் பாதிப்பின்றி இயக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'சீரமைப்பு பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட இடத்தில் ரேக் பார் மாற்றப்பட்டு, நாளை (இன்று) மலை ரயில் இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.