ADDED : அக் 19, 2025 07:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: -கோத்தகிரியில் பருவ மழை தொடர்பாக, பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு, கண்காணித்து வருகின்றனர்.
கோத்தகிரி பகுதியில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பல பகுதிகளில் மரங்கள் விழுந்து, மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. தாலுகாவில் 21 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரிடரை சமாளிக்க ஏதுவாக தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கினர்.