/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின மருத்துவமனையில் அதிகாரிகள் தீவிர ஆய்வு
/
பழங்குடியின மருத்துவமனையில் அதிகாரிகள் தீவிர ஆய்வு
பழங்குடியின மருத்துவமனையில் அதிகாரிகள் தீவிர ஆய்வு
பழங்குடியின மருத்துவமனையில் அதிகாரிகள் தீவிர ஆய்வு
ADDED : ஜன 01, 2026 05:59 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில் செயல்படும் பழங்குடியினருக்கான மருத்துவமனையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில், பழங்குடியினர் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் மூலம், பழங்குடியின மக்களுக்கான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
அலோபதி மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்படும் நிலையில், மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் நோயாளிகளின் வருகை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், குழந்தை பிறப்புகள் மற்றும் நோய்களின் தன்மைகள் குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், பழங்குடியினர் நலத்துறை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பழங்குடியின மக்களுக்கு எந்த மாதிரியான நோய்கள் அதிக அளவில் பாதிக்கிறது மற்றும் நோய்களை கட்டுப்படுத்தி, சுகாதாரத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டியது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திட்ட மேலாளர் விஜயா மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் இருந்தனர்.

