/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழிகள் நிரம்பிய கோழிக்கோடு சாலை மழையில் 'கரைந்தன' ஜல்லிக் கற்கள்
/
குழிகள் நிரம்பிய கோழிக்கோடு சாலை மழையில் 'கரைந்தன' ஜல்லிக் கற்கள்
குழிகள் நிரம்பிய கோழிக்கோடு சாலை மழையில் 'கரைந்தன' ஜல்லிக் கற்கள்
குழிகள் நிரம்பிய கோழிக்கோடு சாலை மழையில் 'கரைந்தன' ஜல்லிக் கற்கள்
ADDED : அக் 19, 2025 10:09 PM

கூடலுார்: கூடலுார், செம்பாலா அருகே, சேதமடைந்த கோழிக்கோடு சாலையில் உள்ள குழிகளில் தேங்கும் மழை நீரால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார், செம்பாலா அருகே, கோழிக்கோடு சாலையில் 50 மீட்டர் தூரம் மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இப்பகுதியை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாத நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர், அவ்வப்போது பாறைப்பொடி கலந்து ஜல்லி கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் இவ்வாறு சீரமைக்கப்பட்ட, சாலை சேதமடைந்து, குழிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. வாகன ஓட்டுநர்கள், கேரளா, கர்நாடக சுற்றுலா பயணியர் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கி செல்கின்றனர். சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஓட்டுநர்கள் கூறுகையில், 'கோழிக்கோடு சாலை, உள்ளூர் வாகன போக்குவரத்துக்கு மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகையினால், வாகன போக்குவரத்து மேலும் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுவதுடன், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது' என்றனர்.
நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் குழந்தைசாமி கூறுகையில், 'பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், செம்பாலா வரை சேதமடைந்த சாலை சீரமைக்க 1.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பின் சீரமைப்பு பணிகள் துவங்கப்படும்' என்றார்.