நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி, கெம்பநாயக்கன் பாளையத்தில், வார சந்தையை ஒட்டி, அச்சம்பாளையம் ரோட்டில், பன்றிகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், 'பன்றிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அசுத்தம் செய்கிறது. கடந்த 23ம் தேதி அருகில் உள்ள குளத்தோட்டத்தில் 60 வாழைக்கன்றுகளை சாய்த்து சேதப்படுத்தி விட்டது. குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளர்ப்பது குறித்தும், சுகாதார கேடு குறித்தும் காரே கவுண்டம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக பன்றிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.