/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாறினால் தகவல் தெரிவிக்கவும்! பெற்றோர்களிடம் விழிப்புணர்வு
/
பள்ளி மாறினால் தகவல் தெரிவிக்கவும்! பெற்றோர்களிடம் விழிப்புணர்வு
பள்ளி மாறினால் தகவல் தெரிவிக்கவும்! பெற்றோர்களிடம் விழிப்புணர்வு
பள்ளி மாறினால் தகவல் தெரிவிக்கவும்! பெற்றோர்களிடம் விழிப்புணர்வு
ADDED : ஏப் 10, 2025 09:58 PM
பொள்ளாச்சி; பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வதாக இருந்தால், உரிய தகவல் தெரிவிக்க வேண்டும், என, தலைமையாசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நடந்து வருகின்றன. அவ்வகையில், மே மாதம், ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர் சேர்க்கை துவக்கப்படும்.
அதன்படி, ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை. அதேபோல, 6, 7, 8-ம் வகுப்புகளில் சேர, ஏற்கனவே படித்த பள்ளி குறித்த தகவலை தெரிவித்தால் போதும். தற்போது, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்ததுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. அதேபோன்று மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதிதேர்வு துவங்கியுள்ளது. இந்நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய முற்பட்டால், உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என, தலைமையாசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தேர்ச்சி அளிக்கப்படுகிறது. இதனால், பிறப்புச் சான்று, ஆதார் உள்ளிட்டவைகளுடன் எந்தவொரு அரசு பள்ளியிலும் சேர முடியும். 9, 10ம் வகுப்பு சேர்க்கைக்கு, மாற்றுச் சான்றிதழ் அவசியம்.
இதையடுத்து, 'எமிஸ்' அடையாள எண்ணை அடிப்படையாகக் கொண்டு அரசுப் பள்ளிகளில் பதிவும் செய்யப்படும். அதனால், மாணவர்கள், வேறு பள்ளியில் சேர முற்பட்டால், ஏற்கனவே படித்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அப்போதுதான், 'எமிஸ்' தளத்தில் முறையாக பதிவு மேற்கொள்ள முடியும். குறிப்பாக, எந்தெந்த வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமை அடைந்துள்ளது; மாணவர்களின் மொத்த எண்ணிக்கை விபரத்தை அறியலாம்.
இவ்வாறு, கூறினர்.

