/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்
/
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்
ADDED : பிப் 05, 2025 11:34 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினருடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில், அதிகளவு விளை நிலங்கள் உள்ளன. விவசாயிகள் தங்கள் நிலத்தில் காய்கறிகள், கிழங்கு வகைகள் மற்றும் நிலக்கடலை பயிரிட்டு வருகின்றனர்.
இதில், கடந்த சில மாதங்களாக கோதவாடி மற்றும் சுற்றுபகுதிகளில் காட்டுப்பன்றிகளால், தொல்லை அதிகரித்து இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் கிழங்கு வகை பயிர் செய்வதை முற்றிலும் தவிர்த்து விட்டனர்.
மேலும், வாழை போன்ற பயிர்களையும் சேதப்படுத்துவதாக விவசாயிகள் பலர் புகார் அளித்தனர். தற்போது காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்தவும், சுட்டு பிடிப்பது சம்பந்தமாக அரசு அறிவுறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, கோதவாடி ஊராட்சியில் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்தவும், சுட்டு பிடிப்பது குறித்தும், நேற்று சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், வனத்துறை வனவர் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில், வனவர் சிவகுமார் பேசியதாவது: பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தினால், அதை விவசாயிகள் புகைப்படம் எடுத்து வைக்க வேண்டும். மற்றும் பயிர் சேதம் குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்து, அந்த புகைப்படத்தை காண்பிக்க வேண்டும்.
சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்த பின், அதற்குரிய இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இரவு நேரத்தில், காட்டுப்பன்றிகள் விரட்டும் போது விவசாயிகளை தாக்கினால், அதற்கேற்ப நஷ்டஈடு வழங்கப்படும்.
காட்டுப்பன்றிகள் இப்பகுதியில் ஏற்படுத்தும் பயிர் சேதம் குறித்து விரிவாக ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு, பன்றிகளை சுடுவதற்கு உத்தரவு பெறப்பட்டு, முற்றிலுமாக காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, பேசினார்.