/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் கட்டமைப்பு மேம்பாட்டு பணி; தரமில்லாத மின் ஒயர் அமைப்பதாக புகார்
/
பள்ளிகளில் கட்டமைப்பு மேம்பாட்டு பணி; தரமில்லாத மின் ஒயர் அமைப்பதாக புகார்
பள்ளிகளில் கட்டமைப்பு மேம்பாட்டு பணி; தரமில்லாத மின் ஒயர் அமைப்பதாக புகார்
பள்ளிகளில் கட்டமைப்பு மேம்பாட்டு பணி; தரமில்லாத மின் ஒயர் அமைப்பதாக புகார்
ADDED : ஆக 18, 2025 09:04 PM
பொள்ளாச்சி; அரசு பள்ளிகளில், கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்போது, மின் விநியோகத்திற்கு தரமில்லாத ஒயர்கள் பயன்படுத்துவதாக புகார் எழுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவர்கள் நலன் கருதி ைஹடெக் லேப், ஸ்மார்ட் போர்டு பயன்பாடு செயல்பாட்டில் உள்ளது.
உயர்நிலை பள்ளிகளை பொறுத்தமட்டில், தலா, 10 கம்ப்யூட்டர்கள், ஒரு புரஜெக்டர், மேல்நிலை பள்ளிகளில் உள்ள லேப்பில் தலா, 20 கம்ப்யூட்டர்கள், புரஜெக்டர்கள், 'ஏசி' வசதி, 24 மணிநேரம் நெட் இணைப்பு, 'சர்வர்' செயல்படுவது போன்ற வசதிகள் உள்ளன.
மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு, ஆசிரியர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலான பயிற்சிகள் போன்றவை, இவ்வகை லேப் வாயிலாக தற்போது நடக்கிறது.
இருப்பினும், சில பள்ளிகளில், அவ்வப்போது, பொதுப்பணித்துறை வாயிலாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்போது, மின் விநியோகத்திற்கு தரமில்லாத ஒயர்கள் பயன்படுத்துவதாக புகார் எழுகிறது.
இது குறித்து, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் பொதுப்பணித்துறை வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. அப்போது, மின் இணைப்பு ஒயர்கள் மாற்றியமைக்கப்படும்.
ஆனால், சில நேரங்களில் தரமில்லாத ஒயர்கள் பயன்படுத்தப்படுகிறது.
அடிக்கடி மின் ஒயர், பாதிப்படைகின்றன. எனவே, பள்ளி தோறும், மின் இணைப்புக்கான ஒயர் தரமாக உள்ளதா என, துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். தரமற்ற ஒயர் பயன்பாட்டால் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.
இவ்வாறு, கூறினர்.