/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகா கணபதி கோவிலில் கும்பாபிேஷகம் 21ல் துவக்கம்
/
மகா கணபதி கோவிலில் கும்பாபிேஷகம் 21ல் துவக்கம்
ADDED : ஜன 15, 2024 12:18 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் மஹா கணபதி, மாகாளியம்மன், கால பைரவர் கோவிலில் கும்பாபிேஷக விழா வரும், 24ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் மஹா கணபதி, மாகாளியம்மன், காலபைரவர் நுாதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிேஷக விழா வரும், 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு மஹா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து, லட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.
வரும், 22ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல், முளைப்பாரி மற்றும் தீர்த்தம் அழைத்து வருதல், விமான கலசஸ்தாபிதம், மாலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு முதற்கால மண்டப வேதிகா பூஜை, சிறப்பு ேஹாம பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, 23ம் தேதி காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால வேதிக மண்டப பூஜை உள்ளிட்ட பூஜைகளும், காலை, 11:00 மணிக்கு மேல் திரவியாஹுதி, விமான கலசஸ்தாபிதம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
மாலை, 5:00 மணிக்கு மேல் மூன்றாம் கால மண்டப வேதிகா பூஜை, இரவு, 700 மணிக்கு யாக சாலை, 108 மூலிகை பழங்கள், புஷ்ப, அன்ன ஆலய ஸகித ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள், இரவு, 10:00 மணிக்கு யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
வரும், 24ம் தேதி காலை, 6:00 மணிக்கு மேல் நான்காம் கால மண்டப வேதிகா பூஜை, காலை, 9:00 மணிக்கு மேல் யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு, காலை, 9:30 மணிக்கு மஹா கணபதி, மாகாளியம்மன், கால பைரவர் விமானம், மூலாலய மஹா கும்பாபி ேஷகம் நடக்கிறது.
தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை, தசதரிசனம், தசதானம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.