/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம் விஞ்ஞானிகளின் புதுமை கண்டுபிடிப்புகள்
/
இளம் விஞ்ஞானிகளின் புதுமை கண்டுபிடிப்புகள்
ADDED : நவ 19, 2025 03:24 AM

கோவை: கோவில்பாளையம், கோவை வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பொள்ளாச்சி இணைந்து, 'கோவை வித்யாஷ்ரம் யங் சயின்டிஸ்ட்ஸ் போரம் 2025' சிறப்பாக நடத்தின.
தமிழ்நாடு, கேரளா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்களை ஒன்றுகூட்டி நடந்த இந்த நிகழ்வில், 42 பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 412 பதிவுகளில் இருந்து 117 சிறந்த திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.
ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ., எல்.ஒ.டி., ஸ்மார்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட துறைகளில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். விழா முடிவில் சிறந்த புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ரோட்டரியன்கள் சதீஷ் சந்திரன், சவிதா, ஸ்ரீகாந்த் வெங்கட், அருண் ராசா, தேன்மொழி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.

