தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கே.எம்.சி.எச். மருத்துவமனையில் புதுமையான பேஸ்மேக்கர் கருவி

 கே.எம்.சி.எச். மருத்துவமனையில் புதுமையான பேஸ்மேக்கர் கருவி

 கே.எம்.சி.எச். மருத்துவமனையில் புதுமையான பேஸ்மேக்கர் கருவி


ADDED : நவ 29, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: இதய நோயாளிகளின் மார்பில் சிறிய துளையிட்டு பேஸ்மேக்கர் பொருத்தப்படுவது வழக்கம். கழுத்து எலும்புக்கு அருகே தோலுக்கு அடியில், மெல்லிய வயர்கள் வாயிலாக பேஸ்மேக்கர் சாதனம் இணைக்கப்படும்.

இதற்கு மாற்றாக, சிறிய மாத்திரை அளவில் வயர்கள் ஏதும் இன்றி, இதயதுடிப்பை முறைப்படுத்தும் பேஸ்மேக்கர் கருவியை, கே.எம்.சி.எச். இதய அறுவைசிகிச்சை நிபுணர் லாரன்ஸ் ஜேசுரான் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக பொருத்தி யுள்ளனர்.

இக்கருவி, தொடை நாளங்கள் வாயிலாக நேரடியாக இருதயத்தின் வலது கீழறையில் பொருத்தப்படும். நோயாளிகளுக்கு சவுகரியமாகவும், பின் பக்கவிளைவுகள் குறைவாகவும் இருக்கும்.

கே.எம்.சி.எச். செயல் இயக்குனர் அருண் பழனிசாமி கூறுகையில், ''இதய மின் இயற்பியல் துறை புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் அறிமுகமான ஒரு மாதத்திற்குள், தமிழகத்தில் முதன்முறையாக இங்கு வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளோம். நோயாளிகளின் எதிர்கால தேவை பொறுத்து, இந்த பேஸ்மேக்கரை அப்கிரேடு செய்துகொள்ளலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம்,'' என்றார்.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடித்த மருத்துவ குழுவினரை, கே.எம்.சி.எச். தலைவர் நல்லா பழனிசாமி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us