ADDED : ஜூன் 05, 2026 03:11 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளை யம் வட்டார விவசாயிகளுக்கு, 'அட்மா' திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மையில் இடுபொருள்கள் பயன்பாடு பயிற்சி முகாம், துடியலுார் அருகே நஞ்சுண்டாபுரத்தில் நடந்தது.
உமா மகேஸ்வரி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலை பேரா சிரியர் பரமேஸ்வரி உரையாற்றினார். நம்மாழ்வார் பயிற்சி மையத்தில் நடைமுறையில் உள்ள இயற்கை வேளாண்மை பயன்படுத்துதல், இடு பொருள்கள், உர செலவை குறைத்து, நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான வழிமுறை மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைப்பதற்கான வழிமுறைகளை, கே.வி.கே., நிறுவன தொழில் நுட்ப வல்லுநர் துரைசாமியும், விவசாய அடையாள எண் கட்டாயம் பெறுவது, அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் துணை வேளாண் அலுவலர் சுரேஷும் விளக்கினர்.
தோட்டக்கலை மற்றும் வேளாண்மை விற்பனை துறை அதிகாரிகள், அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து தெரிவித்தனர். வேளாண்மை துணை இயக்குனர் நிர்மலா, இயற்கை வேளாண்மை மேற்கொள்ளவும், விவசாயிகள் சிட்டா, ஆதார் இணைப்பு பற்றியும் விளக்கினார். பயிற்சி ஏற்பாடுகளை, தினகரன் மற்றும் மகேந்திரன் செய்திருந்தனர்.
