தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

 பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

 பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு


ADDED : ஜூன் 05, 2026 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 03:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் இயங்கும் 83 ஆரம்பப் பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு மலர்கள், இனிப்புகள், மரக்கன்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. சில பள்ளிகளில் மாலை அணிவித்து டிரம்ஸ் இசையுடன் உற்சாகமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. புதிய பாடநூல்கள், சீருடைகள் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன.

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பந்தலிட்டு, தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பேண்டு வாத்திய கருவிகள் இசைத்து, பூ கொடுத்து, செல்பி கார்னரில் பெற்றோருடன் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் கார்டூன் உருவ பொம்மைகள் கைக்குலுக்கி மாணவர்களை வரவேற்றன.

அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை, 4,391 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இவர்களின் தகவல்களை, எமிஸ் இணையதளத்தில், உடனே பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்நாளே வகுப்பு அட்டவணை தயாரித்து, பாடம் நடத்தப்பட்டன. புத்தகம், நோட்டு உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஒன்பது முதல் பிளஸ்1 வரை, பாடவாரியாக தோல் வியை தழுவியவர்களுக்கு, உடனடித்தேர்வுக்கு தயார்ப்படுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பள்ளிக்கான தேவை என்ன, தேர்ச்சி சதவீதம், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான செயல்பாடுகள் குறித்து, பெற்றோரை உறுப்பினராக கொண்ட பள்ளி மேலாண்மை குழுவில் கலந்தாலோசிக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் 165 பள்ளிகளை சுற்றியுள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள், புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்துள்ளது. இங்கு மாவட்ட அளவிலான குழு ஆய்வு செய்கிறது. பள்ளி வளாகங்களில் சந்தேகிக்கும் படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை கண்காணித்து, போலீசார் மற்றும் அந்தந்த வட்டார கல்வி அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை சீதாலட்சுமி வரவேற்றார். நகர்மன்ற தலைவி மெஹரிபா பர்வீன், துணைத்தலைவர் அருள்வடிவு ஆகியோர் பேசினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற, மதுரிமா, சகனா, ஹனா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

வள்ளுவர் நகரவை துவக்கப்பள்ளியில், மாணவர்களை தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் அமுதா முன்னிலை வகித்தார். முதல் வகுப்பில் முதலில் சேர்ந்த, 50 மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்பட்டது.

பிளிச்சி ஊராட்சி பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் ராஜம்மாள், மாணவர்களுக்கு, புத்தகம், புத்தகப்பை, வரைபட ஏடுகள், கலர் பென்சில்கள், சீருடைகள், காலணிகள் வழங்கினார். அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கண்ணன், பி.டி.ஏ. தலைவர் கோவிந்தராஜ் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

கண்ணம்பாளையம் பேரூராட்சியில், முன்னாள் மாணவர் அறக்கட்டளை சார்பில், ஐந்து பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, இனிப்புகள், பேனா, பென்சில் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்னுார் அடுத்த பெரியபுத்துார் துவக்கப்பள்ளி, அன்னுார் வடக்கு துவக்கப்பள்ளி ஆகியவற்றிலும் இனிப்பு வழங்கி மாணவர்களை வரவேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us