/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த தரை பாலம் சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமடைந்த தரை பாலம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 14, 2024 11:13 PM

கிணத்துக்கடவு - கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அரசு பள்ளி செல்லும் ரோட்டில், தரை பாலம் சேதமடைந்த இடத்தில், தற்காலிகமாக லாரி டயர் வைத்துள்ளனர்.
கிணத்துக்கடவு - அரசம்பாளையம் செல்லும் ரோட்டில் இருந்து, அரசம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி செல்லும் இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோடு இணையும் இடத்தில், தரை பாலம் உள்ளது.
இந்த பாலம் சேதமடைந்து இருப்பதால் அந்த இடத்தில், லாரி டயர்கள் வைத்து சேதமடைந்த இடத்தை அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்த ரோட்டில், தினமும் பள்ளி மாணவர்கள், குடியிருப்பு பகுதி மக்கள் அதிகளவு பயணிக்கின்றனர். இந்த வழியில் கனரக வாகனகள் சென்றால், தரை பாலம் இடிந்து விழும்.
எனவே, இந்த தரை பாலம் இடியும் முன், இதை ஊராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தினர்.

