/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்கு ஒழுகும் போஸ்ட் ஆபீஸ் இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
/
மழைக்கு ஒழுகும் போஸ்ட் ஆபீஸ் இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
மழைக்கு ஒழுகும் போஸ்ட் ஆபீஸ் இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
மழைக்கு ஒழுகும் போஸ்ட் ஆபீஸ் இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
ADDED : அக் 18, 2024 10:15 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸ் கட்டடம் பழுதடைந்து மழைக்கு ஒழுகுகிறது.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, போஸ்ட் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. இந்த போஸ்ட் ஆபீசில், இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கணக்கு வைத்துள்ளனர். மேலும், தபால் அனுப்புதல், ஸ்டாம்ப் வாங்க என ஏராளமானோர் போஸ்ட் ஆபீஸ் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், போஸ்ட் ஆபீஸ் கட்டடத்தின் வெளிப்புறத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. கட்டடத்தின் மேல் பகுதியிலும் செடிகள் முளைத்து, பாசி படர்ந்து காணப்படுகிறது.
கட்டடத்தின் உள் பகுதி, மேற்கூரையில் கான்கிரீட் பூச்சு சேதமடைந்து உள்ளது. இதனால், மழை காலத்தில் கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் வடிகிறது. சில நேரங்களில் குழாயில் தண்ணீர் வருவது போல் வந்து, குளம் போல் தேங்கி விடுகிறது. மேலும், துருப்பிடித்த ஷட்டர், மழை நீரில் நனையும் பழைய டேபிள் என, பிரச்னைகளுக்கு நடுவே இந்த போஸ்ட் ஆபீஸ் இயங்கி வருகிறது.
மக்கள் கூறுகையில், 'நல்லட்டிபாளையத்தில் செயல்படும் போஸ்ட் ஆபீஸ் கட்டடம் மிகவும் சேதமடைந்ததுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. மழை காலத்தில், அருகில் உள்ள வீடு அல்லது கடையில் போஸ்ட் ஆபீஸ் செயல்படும் நிலை உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி போஸ்ட் ஆபீசை வேறு இடத்துக்கு மாற்ற செய்ய வேண்டும். அல்லது, போஸ்ட் ஆபீஸ்க்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்,' என்றனர்.