/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி வளர்ச்சி பணிகள்; நிர்வாக இயக்குனர் ஆய்வு
/
நகராட்சி வளர்ச்சி பணிகள்; நிர்வாக இயக்குனர் ஆய்வு
ADDED : ஆக 20, 2025 09:24 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை, மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி நகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.48 கோடி ரூபாயில் தேர்நிலையம் மார்க்கெட்டில், 56 கடைகள் புதியதாக கட்டப்பட்டுள்ளன. மாட்டு சந்தையில், மாடுகள் நிறுத்தம் செய்வதற்காக, ஏழு ெஷட் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், 6.39 கோடி ரூபாய் செலவில் நடைபெறுகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில், ஏழு கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.இந்த வளர்ச்சிப்பணிகளை, நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் ராஜாராம் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது, கமிஷனர் கணேசன், செயற்பொறியாளர் சேர்மகனி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.