/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய பட்டுப் புடவைகளுக்கு உடனடியாக கிடைக்குது பணம்
/
பழைய பட்டுப் புடவைகளுக்கு உடனடியாக கிடைக்குது பணம்
பழைய பட்டுப் புடவைகளுக்கு உடனடியாக கிடைக்குது பணம்
பழைய பட்டுப் புடவைகளுக்கு உடனடியாக கிடைக்குது பணம்
ADDED : அக் 17, 2024 11:54 PM

சுப நிகழ்ச்சிகள் என்றாலே, பெண்கள் அணிய விரும்புவது, பட்டு ரகங்கள் தான். அப்படி, பார்த்து பார்த்து வாங்கிய பட்டுப்புடவை. நிறைய நிகழ்ச்சிகளுக்கு அணிந்து சென்று வந்தாகி விட்டது. ஆனாலும், கொஞ்சம் பழையதாகி விட்டதே... அப்படியே வைத்திருக்க முடியாதே என்று நினைத்தால், பழையதை கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தாத பழைய பட்டுப் புடவையை ஸ்ரீ சூர்யா பட்டு சென்டரில் பணமாக மாற்ற முடியும். இங்கு, பழைய பட்டு புடவைகள், பட்டு பாவாடைகள் மற்றும் வேட்டிகளின் ஜரிகைகளின் மதிப்புக்கு ஏற்ப, உடனடியாக பணம் வழங்கப்படுகிறது.
சேலை எவ்வளவு பழையதாக இருந்தாலும், அது கிழிந்தே போனாலும் கூட எடுத்துக் கொள்கின்றனர். பழைய டிஷ்யூ பட்டு சேலைகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் முதல், 85 ஆயிரம் வரை வழங்குகின்றனர். இதே போல், பழைய வெள்ளி பொருட்களுக்கும், மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப, உடனடியாக பணம் வழங்கப்படுகிறது.- ஸ்ரீ சூர்யா பட்டு சென்டர், போத்தீஸ் எதிரில், கிராஸ்கட் ரோடு, காந்திபுரம். 90422 66666.