/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாசனப்பணியை பகலில் மேற்கொள்ள அறிவுறுத்தல்
/
பாசனப்பணியை பகலில் மேற்கொள்ள அறிவுறுத்தல்
ADDED : டிச 15, 2024 11:52 PM
கோவை; விவசாயிகள் மின்சாரத்தை பயன்படுத்தி துவங்கும், விவசாய பாசனப்பணிகளை காலையில் துவங்கி மாலையில் முடிக்க, மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி கூறியதாவது:
பகலில் இலவசமாக கிடைக்கும், புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை, விவசாயிகள் அதிகமாக பயன்படுத்த வேண்டும். அப்போது உற்பத்தி செய்த சூரிய ஒளி மின்சாரத்தை, அப்போதைக்கப்போது பயன்படுத்துவது நல்லது. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களை, காலை நேரத்திலேயே பயன்படுத்துங்கள்.
அடுத்தடுத்து வரும் சூரிய ஒளி மின் ஆற்றலை, நம் விவசாயிகள் பகல் நேரத்தில் துரிதமாகவும், வேகமாகவும் பயன்படுத்தலாம். அப்போது பிற வளங்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் பணியை குறைத்துக்கொள்ளலாம். சூழல் மாசுபாடுகள் குறையும். பசுமை ஆற்றல் அதிகம் கிடைக்கும். நாடும் பொருளாதார வளர்ச்சிப்பாதையில் முன்னேற்றம் காணும். தண்ணீர் பாய்ச்சும் பணிகளை, காலையிலேயே துவக்கி, இரவுக்குள் முடித்து விடுங்கள். எக்காரணம் கொண்டும் திடீர் பாசன முடிவுகளை மேற்கொள்ள வேண்டாம்.
இவ்வாறு, குப்புராணி கூறியுள்ளார்.