sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சொட்டுநீர் பாசன குழாய் சுத்தம் செய்ய விளக்கம்

/

 சொட்டுநீர் பாசன குழாய் சுத்தம் செய்ய விளக்கம்

 சொட்டுநீர் பாசன குழாய் சுத்தம் செய்ய விளக்கம்

 சொட்டுநீர் பாசன குழாய் சுத்தம் செய்ய விளக்கம்


ADDED : பிப் 16, 2026 06:18 AM

Google News

ADDED : பிப் 16, 2026 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: சொட்டுநீர் பாசன குழாயில் படிந்துள்ள மண் மற்றும் உப்புகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்து, விவசாயிகளுக்கு வேளாண் பல்கலை மாணவிகள், செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நான்காம் ஆண்டு படிக்கும், 9 மாணவிகள் 'தங்கள் திட்டத்தில்' காரமடையில் முகாம் அமைத்துள்ளனர்.

இவர்கள் ஒவ்வொரு விவசாய தோட்டங்களுக்குச் சென்று, நவீன விவசாய முறை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சிறுமுகையை அடுத்த சம்பரவள்ளிபுதூர் கிராமத்தில் சொட்டுநீர் பாசன குழாய்களை எவ்வாறு சுத்தம் செய்வது குறித்து, மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

அப்போது மாணவிகள் பேசுகையில், 'சொட்டுநீர் பாசன குழாய்களில் மண் துகள்கள், மணல், பாசி, சேறு மற்றும் உப்பு ஆகியவை படிந்திருப்பதால் தண்ணீர் வரும் ஓட்டைகள் அடைபடும்.

இதனால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் சரியாக செல்லாமல் இருக்கும், மகசூல் குறையும்.

தண்ணீர் செல்லும் சொட்டு நீர் பாசன குழாயை சுத்தம் செய்ய, அமிலம் மற்றும் ரசாயன கலவையை தண்ணீரில் கலக்கி, சொட்டு நீர் பாசன குழாய்க்குள் செலுத்த வேண்டும். அப்போது அடைப்புகள் சுத்தமாகி விடும்' என்றனர்.






      Dinamalar
      Follow us