/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர் நல நிதி செலுத்த அறிவுறுத்தல்
/
தொழிலாளர் நல நிதி செலுத்த அறிவுறுத்தல்
ADDED : அக் 16, 2025 09:03 PM
கோவை: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அறிக்கை:
தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972ன் படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும், ஓராண்டில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும், ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும்.
தொழிலாளியின் பங்காக ரூ.20, நிறுவனத்தின் பங்காக ரூ.40 என 60 ரூபாயை, 2025ம் ஆண்டுக்கான நிதியை, டிச. ஊதியத்தில் பிடித்தம் செய்து, 2026 ஜன. 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
நிறுவனங்கள், lwmis.lwb.tn.gov.in என்ற தளத்தில், தொழிலாளர் நல நிதி சட்டத்தின் கீழ் பதிவு செய்தும், நல நிதியை ஆன்லைன் வாயிலாக செலுத்தி, உடனடியாக ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே, lwb.tn.gov.in என்ற தளத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களும், தற்போது செயல்பட்டு வரும் இப்புதிய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.