/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள்
/
நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள்
ADDED : அக் 16, 2025 09:03 PM
கோவை:
நண்பர் கொலை வழக்கில், வாலிபருக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது.
சூலுார் அருகேயுள்ள முத்துகவுண்டன் புதுாரை சேர்ந்தவர் முருகன்,37. இவரும் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார்,30, என்பரும் நண்பர்கள். கடந்த 2019, மே,29 ல், அங்குள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா நடந்த போது இருவரும் சேர்ந்து மது குடித்தனர். குடி போதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில், அரவிந்த்குமார் சரமாரியாக தாக்கியதில், படுகாயமடைந்த முருகன் உயிரிழந்தார்.
சூலுார் போலீசார் விசாரித்து, அரவிந்த்குமாரை கைது செய்தனர். அவர் மீது, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த்குமாருக்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.