தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தடய அறிவியல் ஆய்வகத்துக்கு சீருடையில் வர அறிவுறுத்தல்

தடய அறிவியல் ஆய்வகத்துக்கு சீருடையில் வர அறிவுறுத்தல்

தடய அறிவியல் ஆய்வகத்துக்கு சீருடையில் வர அறிவுறுத்தல்


ADDED : ஏப் 15, 2025 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 11:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் வட்டார தடய அறிவியல் ஆய்வகம் அமைந்துள்ளது. இங்கு, காவல்துறை வழக்கு சார்ந்த பல்வேறு தடயங்களை, ஆய்வு செய்து முடிவுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆய்வகத்திற்கு, கோவை, திருப்பூர். ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த போலீசார், வழக்கு சார்ந்த பொருட்களை கொண்டு வந்து செல்கின்றனர். இதுபோன்று, வழக்கு சார்ந்த பொருட்களை கொண்டு வரும் போலீசார், அதிகாரிகள் உரிய சீருடையில் வரவேண்டும் எனவும், நீதிமன்றங்களில் இருந்து ஆய்வகத்திற்கு வழக்கு சார்ந்த பொருட்களை மாலை, 5:00 மணிக்கு மேல் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், வட்டார தடய அறிவியல் ஆய்வகபிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us