/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., செயலியை காட்சிப்படுத்த அறிவுறுத்தல்
/
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., செயலியை காட்சிப்படுத்த அறிவுறுத்தல்
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., செயலியை காட்சிப்படுத்த அறிவுறுத்தல்
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., செயலியை காட்சிப்படுத்த அறிவுறுத்தல்
ADDED : ஆக 03, 2025 09:38 PM
கோவை; தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) ' உணவு பாதுகாப்பு கனெக்ட்' ( food safety connect) எனும் செயலியின் க்யூ ஆர்., கோடு பொதுமக்கள் பார்வையில் படும்படி ஒட்டிவைக்க, உணவு சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு சார்ந்த நிறுவனங்கள் அதன் எப்.எஸ்.எஸ்.ஏ., உரிமம், பதிவுக்கான சான்றை பொதுமக்கள் பார்வைக்கு கட்டாயம் காட்சிப்படுத்தவேண்டியது விதிமுறை. இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறையின் பிரத்யேக செயலியின் 'க்யூ ஆர் கோடு' போஸ்டர் பொதுமக்கள் பார்வையில் படும் படி பில்லிங், உணவுக்கான இருக்கை ஆகிய இடங்களில் காட்சிப்படுத்த கூறப்பட்டுள்ளது.
இச்செயலி வாயிலாக, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்துகொள்ள முடியும். மேலும், புகார்களை உடனுக்குடன் பதிவு செய்யவும் இயலும்.
இச்செயலியில் பெறப்படும் புகார்கள் அந்தந்த பகுதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு ஆய்வுக்கு அறிவுறுத்தப்படுகிறது.கோவை மாவட்டத்தில் அனைத்து வகை உணவகங்கள், உணவு சார்ந்த தொழில் மேற்கொள்ளும் இடங்களில் இதுகுறித்து அறிவுறுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.