/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2 நாட்களில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவுறுத்தல்
/
2 நாட்களில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவுறுத்தல்
2 நாட்களில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவுறுத்தல்
2 நாட்களில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவுறுத்தல்
ADDED : ஏப் 16, 2025 10:17 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை இரண்டு நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
கோடை விடுமுறையை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையம் வழியாக சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் அண்ணாஜீ ராவ் சாலை, உதகை சாலை, அன்னூர் சாலை, ஐந்து முக்கு பகுதி போன்ற பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
இதற்கு இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் காரணம் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் நேற்று இப்பகுதிகளில் மேட்டுப்பாளையம் நகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் இரண்டு நாட்களுக்குள் கடைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.-