/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவநிலை மாற்றத்தை பதிவு செய்யும் கருவிகள்; முன்னோட்ட திட்டம் துவக்கம்
/
பருவநிலை மாற்றத்தை பதிவு செய்யும் கருவிகள்; முன்னோட்ட திட்டம் துவக்கம்
பருவநிலை மாற்றத்தை பதிவு செய்யும் கருவிகள்; முன்னோட்ட திட்டம் துவக்கம்
பருவநிலை மாற்றத்தை பதிவு செய்யும் கருவிகள்; முன்னோட்ட திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 13, 2025 09:00 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பருவநிலை மாற்றத்தை கருவிகள் வாயிலாக பதிவு செய்யும் முன்னோட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், 75 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இதில், 30 சதவீத தென்னை மரங்கள் வேர் வாடல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பருவநிலலை மாற்றத்தை கண்டறிவது அவசியமாக உள்ளது.
இதற்காக, பொள்ளாச்சி ஜாதிக்காய் உற்பத்தி நிறுவனம், தனியார் தொழில் நிறுவனத்துடன் இணைந்து, பருவநிலை மாற்றத்தை அறிவதற்கான தரவுகளை சேகரிக்க கருவிகள் பொருத்தும் முன்னோட்ட திட்டம், கோட்டூரில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார், வேளாண் பல்கலை ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி, திருமூர்த்தி திட்டக்குழு தலைவர் பரமசிவம், ஆழியாறு திட்டக்குழு தலைவர் செந்தில், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகி அசோக் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
நிலத்தில், துணைக்கருவி வைத்து அதை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி ஜாதிக்காய் உற்பத்தி நிறுவன நிர்வாக இயக்குனர் ரஞ்சித்குமார் கூறியதாவது:
தென்னை சாகுபடிக்கு மாற்றாகவோ அல்லது பாதிப்பின் தாக்கத்தை அறியவோ பருவநிலை மாற்றத்தை கணக்கிட வேண்டியது அவசியமாக உள்ளது. பருவநிலை மாற்றத்தை அறிவதற்கான தரவுகளை சேகரிக்க கையடக்கமான துணைக்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வயல்வெளியில் இக்கருவி பொருத்தப்படும். ஒரு கி.மீ., முதல் இரண்டு கி.மீ., வரை தொலைவில் உள்ள தனது மையக்கருவிக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ள அலைவரிசையில், 'சிம் கார்டு' உதவி இல்லாமல் தரவுகளை உடனுக்கு உடன் அனுப்பி வைக்கும்.
ஒரு மையக்கருவியுடன், 10 துணைக்கருவிகளை இணைக்கலாம். துணைக்கருவிகளில் இருந்து பெறப்படும் தரவுகளை, மையக்கருவி தொலைபேசி, 'சிம்கார்டு' வழியாக இணையதளத்துக்கு அனுப்பும். இத்துணைக்கருவி உயர்ந்தபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்ப அளவையும், ஈரப்பதத்தையும் நிமிடம் வாரியாக அறிந்து தரவுகளை அனுப்பி வைக்கும்.
இத்தரவுகள் துணையுடன், பயிரின் பாதிப்பை கண்டறிய முடியும். இதன் அடிப்படையில், கோட்டூரில் முன்னெடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. பருவ நிலை மாற்றத்தை தகுந்த தரவுகளை பரந்த அளவில் சேகரித்து ஆய்வு செய்தால் தான் வேளாண் தொழிலை தாக்கத்திலிருந்து காப்பாற்ற திட்டமிட முடியும். இவ்வாறு, கூறினார்.