/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவருக்கு இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவு
/
முதியவருக்கு இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவு
முதியவருக்கு இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவு
முதியவருக்கு இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவு
ADDED : ஏப் 04, 2025 11:42 PM
கோவை; முதியவருக்கு இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தொண்டாமுத்தூர், நரசிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த நாராயணன்,84;கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது ஓய்வூதியத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக 497 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.
நாராயணனுக்கு, 2023 ஆக.,28ல், இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக 4.30 லட்சம் ரூபாய் மருத்துவ கட்டணம் செலுத்தினார்.
இத்தொகையை வழங்கக் கோரி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் 1.79 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கியது.
மருத்துவ செலவுக்கான முழுத்தொகை மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், நாராயணன் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மருத்துவ செலவு தொகையில், 75 சதவீதத்தை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

