/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாழை, மரவள்ளிக்கு காப்பீடு'
/
'வாழை, மரவள்ளிக்கு காப்பீடு'
ADDED : நவ 17, 2025 01:44 AM
அன்னூர்: வாழை மற்றும் மரவள்ளிக்கு காப்பீடு செய்ய, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் ரபி பருவத்திற்கு, வாழை, மரவள்ளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.ஒரு எக்டேர் வாழைக்கு காப்பீடு செய்ய பிரீமியம் தொகையாக, 4 ஆயிரத்து 937 ரூபாயும், மரவள்ளிக்கு 4 ஆயிரத்து 903 ரூபாயும் செலுத்த வேண்டும்.
இதனால் வாழை மற்றும் மரவள்ளிக்கு பாதிப்பு ஏற்பட்டால், காப்பீடு தொகை பெறலாம். காப்பீடு செய்வதற்கு, வரும் பிப். 28ம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் கூடுதல் விபரங்களுக்கு, அன்னூர் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். காப்பீடு செய்து பயன்பெறலாம்.

