/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு
/
தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு
ADDED : செப் 17, 2025 08:58 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் தென்னை மரம் ஏறுபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விபத்து காப்பீடு குறித்து அறிவுறுத்தப்பட்டது.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை சார்பில், தென்னை மரம் ஏறுபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான, விபத்து காப்பீடு குறித்த முகாம் நடந்தது.
இதில், கிணத்துக்கடவு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி, உதவி தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன், கோவை தென்னை வளர்ச்சி வாரிய வளர்ச்சி அலுவலர் அனீஸ், தொழில்நுட்ப அலுவலர் பாரதிபிரியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.
தென்னை மரம் ஏறுபவர்கள் ஆண்டிற்கு, 143 ரூபாய் (15 சதவீதம்) பிரீமியமாக செலுத்த வேண்டும். மீதம் உள்ள, 85 சதவீதம் பிரீமிய தொகை சென்னை வளர்ச்சி வாரியத்தால் செலுத்தப்படும்.
இதில், விபத்துக்கான மருத்துவமனை செலவுக்கு, 2 லட்சம் வரையும், ஊனம் ஏற்பட்டால் 3.5 லட்சம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட தொகையாக, 7 லட்சம் வரை பெறலாம். காப்பீட்டு திட்டத்தில், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பதிவு செய்யலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.