/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு கட்டடமில்லை
/
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு கட்டடமில்லை
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு கட்டடமில்லை
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு கட்டடமில்லை
ADDED : டிச 25, 2025 06:04 AM
வால்பாறை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கு நிரந்தர அலுவலகம் இல்லாததால் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறை மலைப்பகுதியில், 43 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் கல்வி பயிலும் வகையில், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையங்களில், 720க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.வால்பாறை நகரில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலருக்கான அலுவலகம் இல்லை.
நிரந்தர கட்டடம் இல்லாததால், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான 'யாத்திரை நிவாஸ்' கட்டடத்தில் தற்காலிக அலுவலகம் செயல்படுகிறது. நிரந்தர கட்டடம் இல்லாததால் அங்கன்வாடி ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு நிரந்தர கட்டடம் இல்லாததால், அதிகாரிகள், பணியாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் அதிகளவில் படிக்கும் வகையில், எஸ்டேட் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். வால்பாறை நகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் கட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் உள்ள, 'யாத்திரை நிவாஸ்' கட்டடத்தை இடித்து, அந்த இடத்தில் சுற்றுலா பயணியர் தங்கும் விடுதி விரைவில் கட்டப்படும். அப்போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் அங்கிருந்து காலி செய்யப்படும். அந்த துறையினர் தான் மாற்று இடத்தில் அலுவலகம் அமைக்க வேண்டும்,' என்றனர்.
இதனால், வால்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

