/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம்!' தோட்டக்கலைத்துறை அறிவுரை
/
'வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம்!' தோட்டக்கலைத்துறை அறிவுரை
'வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம்!' தோட்டக்கலைத்துறை அறிவுரை
'வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம்!' தோட்டக்கலைத்துறை அறிவுரை
ADDED : ஜன 08, 2025 10:46 PM
பொள்ளாச்சி; 'தென்னையில், வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறையை பின்பற்ற வேண்டும்,' என, வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி வடக்கு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா அறிக்கை:
வட அமெரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து இந்தியாவுக்கு வந்தவை தான் ரூப்காஸ் சுருள் வெள்ளை ஈக்கள். கடந்த, 2016ம் ஆண்டு முதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
வெள்ளை ஈ இலைகளின் உட்பகுதியில் சுருள், சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும். இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் ஓலைகளின் அடிப்பாகத்தில் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.
இவை வெளியேற்றும் தேன் போன்ற இனிப்பான திரவம் கீழே உள்ள இலைகளின் மேல்பகுதியில் விழுந்து பரவி, கரும்பூஞ்சணம் வளர்வதால், ஓலைகள் கறுப்பு நிறமாக மாறிவிடும். இதனால், ஒளிச்சேர்க்கை தற்காலிகமாக தடுக்கப்பட்டு தென்னை மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும்.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறையை பின்பற்றலாம். அதில், பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆன ஒட்டுப்பொறிகள் (நீளம் 5 அடிக்கு, 1.5 அடி அகலம்) ஏக்கருக்கு, எட்டு என்ற எண்ணிக்கையில் மரங்களுக்கு இடையில் தொங்கவிட்டு அல்லது தண்டுபகுதியில் ஆறு அடி உயரத்தில் சுற்றியும் வெள்ளை ஈக்களை துணியால் சுத்தமாக துடைத்த பின்பு ஒட்டும் பசையான விளக்கெண்ணைய் பூச வேண்டும்.
விசைத் தெளிப்பானை கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தலாம். என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் உள்ள தென்னை ஓலைகளை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம், தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம்.
சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பின் விளைவாக ஏற்படும் கரும்பூஞ்சணத்தை கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதா மாவை, ஐந்து லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் பின், 20 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.