ஒருங்கிணைந்த என்.சி.சி., வருடாந்திர பயிற்சி முகாம்
ஒருங்கிணைந்த என்.சி.சி., வருடாந்திர பயிற்சி முகாம்
ADDED : மே 30, 2026 03:21 AM

கோவை: கோவையில் உள்ள (டிஎன்) சி.டி.சி., என்.சி.சி., பிரிவு சார்பில், டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவன வளாகத்தில், மே 25ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை பத்து நாட்கள் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
முகாமுக்கு சி.டி.சி., என்.சி.சி., யின் கட்டளை அதிகாரியான கர்னல் மோஹித் ராவ் சவுஹான் தலைமை வகிக்கிறார். பல்வேறு பள்ளிகள், கல்லுாரிகளை சேர்ந்த, 495 என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கேடட் 2 சி.டி.சி., என்.சி.சி., யை சேர்ந்த மூத்த ஜே.சி.ஓ., -சுபேதார் ஏ.கே.கோஷ் மற்றும் சுபேதார் முகேஷ்குமார் ஆகியோரின் தலைமையில், ராணுவ நிரந்தரப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பெண் பயிற்றுவிப்பாளரால், என்.சி.சி., அணி வகுப்புப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சி, வரைபட வாசிப்பு அமர்வுகள் போன்ற அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பல்வேறு பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த, 12 இணை என்.சி.சி., அதிகாரிகள், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
