ADDED : பிப் 19, 2026 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: மதுக்கரை வட்டாரத்திலுள்ள அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது.
மையத்தின் செயல்பாடுகள், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீபா மற்றும் அரிசிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.
இங்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பிசியோதெரபி, உளவியல் ஆலோசனை, கல்வி போன்ற சேவைகள் தகுதி வாய்ந்த நிபுணர்களால் அளிக்கப்படுகின்றன.
அரசு நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பித்தல், உதவி உபகரணங்களை பெற விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல், கல்வி உதவி தொகையை பெற விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன.

