/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சியளிக்க திட்டம்
/
புதிய தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சியளிக்க திட்டம்
புதிய தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சியளிக்க திட்டம்
புதிய தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சியளிக்க திட்டம்
ADDED : பிப் 19, 2026 05:12 AM
கோவை: 'விஷன் 2030 - வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், தொழில்நுட்பம் சார்ந்த புதிய துறைகளில் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்க, கோவை மாவட்ட நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது.
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவையில் உள்ள 55 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்களும், 34 ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்களும் பயிற்சியை முடித்துள்ளனர்.
இத்திட்டத்தில் 12 முன்னணி தொழில் நிறுவனங்கள் இணைந்து 2024ம் ஆண்டு முதல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பயிற்சி பெற்ற 4,264 பேரில், 3,653 பேர் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். அவர்களில் 802 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தின் தொழில்துறை வளத்தை பயன்படுத்தி, பெரிய நிறுவனங்களை 'விஷன் 2030' திட்டத்தின் பயிற்சி மையங்களாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீனத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய 16 முக்கிய துறைகளில், 16 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

