/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவுசார் கற்றல் ஹேக்கத்தான் சங்கரா மாணவர்கள் ஆர்வம்
/
அறிவுசார் கற்றல் ஹேக்கத்தான் சங்கரா மாணவர்கள் ஆர்வம்
அறிவுசார் கற்றல் ஹேக்கத்தான் சங்கரா மாணவர்கள் ஆர்வம்
அறிவுசார் கற்றல் ஹேக்கத்தான் சங்கரா மாணவர்கள் ஆர்வம்
ADDED : பிப் 08, 2025 11:44 PM

கோவை : சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் கணினி ஆய்வக அறையில், 24மணிநேர அறிவுசார் கற்றல் ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடந்தது.
கணினி அறிவியல் துறை மற்றும் கணினி அறிவியல் தரவுப் பகுப்பாய்வுத்துறை சார்பில் பினாக்கிள் செவன் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து ஹேக்கத்தான் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக மூத்த நிர்வாக மென்பொருள் பொறியாளர் நந்த கிருஷ்ணன், மென்பொருள் பொறியாளர் அசோக்குமார், மனித வள மேலாளர் நீரஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
போட்டியில் கணினி துறையைச் சேர்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
முதல்வர் ராதிகா, கணினி அறிவியல் துறைத்தலைவர் லிங்கராஜ், உதவிப் பேராசிரியர் சசிகலா ஆகியோர் கலந்துகொண்டனர்.