/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் ஓய்வு மண்டப பணி தீவிரம்
/
மாசாணியம்மன் கோவிலில் ஓய்வு மண்டப பணி தீவிரம்
ADDED : அக் 30, 2024 08:26 PM

ஆனைமலை ;ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பக்தர்களுக்கான ஓய்வு மண்டபம் கட்டும் பணிகள் நடக்கிறது.
ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு, வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
மேலும், குண்டம் திருவிழாவுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதியாக, ஓய்வு மண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தம், 3.15 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள ஓய்வு மண்டபம் கட்டும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. அதில், நவீன இயந்திரங்களுடன் மேற்கூரை கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் தெரிவித்தார்.