ADDED : ஏப் 22, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட ஓட்டுசாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்கு, 40 மற்றும் பொள்ளாச்சி, 26 சாவடிகள் என, மொத்தம் 66 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், வேலந்தாவளம் ஓட்டுச்சாவடி பதட்டமான சூழலில் உள்ளது. இந்நிலையில், அனைத்து ஓட்டு சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும், கண்காணிப்பு கேமராக்கள், தடுப்புகள், ஓட்டளிக்க வரும் நபர்களுகளுக்கான வாகன பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வரும் பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
