தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

 வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

 வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு


ADDED : ஏப் 15, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை வனப்பகுதிகளில், வேட்டை கும்பல்கள் நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடைகாலம் துவங்கிய நிலையில், வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. வறட்சியை சமாளிக்க வனவிலங்குகள், நீராதாரம் உள்ள இடங்களை தேடி இடம் பெயர்கின்றன. இதை பயன்படுத்தி, வேட்டைக்கும்பல்கள் விலங்குகளை வேட்டையாட வாய்ப்புள்ளது என்பதால், வனத்துறையினர் 'அலர்ட்' ஆகியுள்ளனர்.

காரமடை வனத்துறையினர் கூறுகையில், 'காரமடை வனப்பகுதியில் வறட்சியை சமாளிக்க, அடர் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தினமும் நீர் நிரப்பப்படுகிறது. வனவிலங்குகள் நடமாட்டம் முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது. வேட்டைக் கும்பல்கள் நடமாட்டம் உள்ளதா என சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அடர் வனப்பகுதிகளில் ரோந்து செல்லப்படுகிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us