/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
/
சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
ADDED : பிப் 18, 2025 10:12 PM
மேட்டுப்பாளையம்; பொது இடங்களில் கடும் வெயிலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்களை குழந்தைகள் நல அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள், கடைகள், குடியிருப்பு பகுதிகள், சிக்னல்கள் என பொது இடங்களில் பெண்கள் கும்பலாக கைக்குழந்தைகளை தோளில் தூக்கிக்கொண்டு வந்து பிச்சை கேட்டு வருவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்பெண்கள் சுமந்து வரும் குழந்தைகள், பெரும்பாலும் அழுவது கிடையாது, கடும் வெயிலில் கொண்டுவரப்படும் குழந்தைகள் பார்பதற்கு மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஹப்ஸா கூறியதாவது:-
குழந்தைகளை கொண்டு வந்து பிச்சை கேட்போருக்கு, பொதுமக்கள் யாரும் பணம் தர வேண்டாம். குழந்தைகள் குறித்து சந்தேகம் இருப்பின், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 என்ற கட்டணம் இல்லா எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிக்கலாம். குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர்களும் இதுதொடர்பாக கண்காணித்து வருகின்றனர்.
குழந்தைகள் அவர்களுடையது தானா, என்ன காரணம், குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் உள்ளனரா என விசாரணை மேற்கொண்டு, உண்மையில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவோருக்கு, அவர்களது வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு ஏற்பாடு செய்வோம்.
இதுவே விசாரணையில் பொய் என தெரிந்தால், குழந்தைகள் வாடகைக்கோ அல்லது திருடப்பட்ட குழந்தைகளாக இருந்தால், சட்டப்படி போலீஸில் புகார் அளித்து, வழக்குப் பதிவு செய்யப்படும். மீட்கப்படும் கைக்குழந்தைகள், குழந்தைகள் அனைவரும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டுப்பாளையம், காரமடை போலீசார் தமிழகம் மற்றும் வேறு பகுதிகளில் காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக தங்களிடம் உள்ள விவரங்களை வைத்து, இதுபோன்று குழந்தைகளை கொண்டு வரும் பெண்களிடம் விசாரிக்கின்றனர். கடத்தப்பட்ட அல்லது தொலைந்து போன குழந்தைகள் யாராவது இருக்கிறார்களாக என பல கோணங்களில் விசாரிக்கின்றனர்.
கடும் வெயில் குழந்தைகள் அதிகம் நேரம் இருப்பதால், உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறுகையில், கடும் வெயிலில் அதிகம் நேரம் குழந்தைகள் இருந்தால், நீர்சத்து குறைந்து உடல் நலம் பாதிக்கும்.
ஹீட் ஸ்ட்ரோக் வரவும் வாய்ப்புள்ளது. புழுதிகளால் ஒவ்வாமை ஏற்படும், என்றார்.----------