தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கல்லுாரிகளுக்கு இடையே தடகள போட்டிகள் துவக்கம்

கல்லுாரிகளுக்கு இடையே தடகள போட்டிகள் துவக்கம்

கல்லுாரிகளுக்கு இடையே தடகள போட்டிகள் துவக்கம்


ADDED : நவ 01, 2026 03:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 03:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரதியார் பல்கலையின் கீழ், 44வது கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டி இன்று (நவ.,1) பல்கலை வளாகத்தில் துவங்கியது. மராத்தான் போட்டியை பல்கலை தொலைத்துார கல்வி இயக்குனர் செல்லசாமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

தொடர்ந்து 3ம் தேதி வரை, 44 பிரிவுகளின் கீழ், தடகள போட்டிகள் நடக்கவுள்ளன. இப்போட்டிகள், நேரு மைதானத்தில் இன்றும் நாளையும் நடக்கிறது. 82 கல்லுாரிகளில் இருந்து 1200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளில் நடந்த மராத்தான் போட்டியில், ஆண்கள் பிரிவில் வி.எல்.பி. கல்லுாரி ஹரிஷ் முதலிடமும், தினகரன் இரண்டாம் இடமும், குமரகுரு கல்லுாரி ஹரிஹரன் மூன்றாம் இடமும் பெற்றனர்.

பெண்கள் பிரிவில், என்.ஜி.பி. கல்லுாரி சவுமியா, கே.பி.ஆர்., சன்மதி, நிர்மலா கல்லுாரி வினோதினி ஆகிய மூவர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

மராத்தான் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலை பதிவாளர் ராஜவேல் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us