UPDATED : நவ 01, 2026 03:47 PM
ADDED : நவ 01, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில், ஒன்றாவது டிவிஷன் போட்டி சூர்யபாலா மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது.
கோவை டஸ்கர்ஸ் அணியினர் 40.2 ஓவரில் 151 ரன் எடுத்தனர். தாஷிஸ் கண்ணன் 41 ரன் எடுத்தார். எதிரணியின் கார்த்திகேயன் 4, ஆனந்தகுமார் 3 விக்கெட் வீழ்த்தினர். சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணியினர் 35.4 ஓவரில் 99 ரன் எடுத்து தோல்வியடைந்தனர். எதிரணியின் கிருபாகர் 4, தாஷிஸ் கண்ணன் 3 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.
