/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிடெக்னிக் இடையே 'செஸ்' போட்டி; பரிசுகளை தட்டிய பி.எஸ்.ஜி., கல்லுாரி
/
பாலிடெக்னிக் இடையே 'செஸ்' போட்டி; பரிசுகளை தட்டிய பி.எஸ்.ஜி., கல்லுாரி
பாலிடெக்னிக் இடையே 'செஸ்' போட்டி; பரிசுகளை தட்டிய பி.எஸ்.ஜி., கல்லுாரி
பாலிடெக்னிக் இடையே 'செஸ்' போட்டி; பரிசுகளை தட்டிய பி.எஸ்.ஜி., கல்லுாரி
ADDED : செப் 25, 2024 12:06 AM

கோவை : ஐ.பி.ஏ.ஏ., செஸ் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல் பரிசை தட்டியது.
ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியில் 'இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன்'(ஐ.பி.ஏ.ஏ.,) செஸ் போட்டி நடந்தது. இதில், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு கல்லுாரிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டிகளை, கல்லுாரி முதல்வர் பன்சல் ராஜ்குமார் துவக்கிவைத்தார். பெண்கள் பிரிவில், முதல் பரிசை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியும், இரண்டாம் பரிசை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியும், மூன்றாம் பரிசை பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியும், நான்காம் பரிசை ஆர்.வி.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியும் வென்றன.
ஆண்கள் பிரிவில், முதல் பரிசை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியும், இரண்டாம் பரிசை பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியும், மூன்றாம் பரிசை கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியும், நான்காம் பரிசை ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியும் வென்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு செஸ் நடுவர் வினோத், கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் முனிராஜ் உள்ளிட்டோர் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினர்.