/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி: இன்று இறுதி பலப்பரீட்சை
/
பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி: இன்று இறுதி பலப்பரீட்சை
பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி: இன்று இறுதி பலப்பரீட்சை
பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி: இன்று இறுதி பலப்பரீட்சை
ADDED : நவ 06, 2025 11:25 PM

கோவை: கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான இந்துஸ்தான் ட்ராபி' போட்டி, இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்து வருகிறது.
நேற்று, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் அரையிறுதிப் போட்டியில், ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளி அணிகள் மோதின. இதில், 4--0 என்ற கோல் கணக்கில், ராகவேந்திரா அணி வென்றது.
மாணவியர் 19 வயதுக்கு உட்பட்ட அரையிறுதி போட்டியில், சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சி.பி.எஸ்.சி., அணிகள் மோதியதில், 4--1 என்ற கோல் கணக்கில், சி.எஸ்.ஐ., அணி வெற்றி பெற்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில், அத்யாயனா சர்வதேச பள்ளி மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி அணிகள் மோதிய ஆட்டத்தில், அத்யாயனா அணி வெற்றி பெற்றது. இன்று இறுதிப் போட்டிகள் நடக்கின்றன.

